உண்மையை அறியாமல் தான் நினைத்த மாதிரி பேசுவது கஜேந்திரகுமாரின் குறைபாடு!

ஆசிரியர் - Editor I
உண்மையை அறியாமல் தான் நினைத்த மாதிரி பேசுவது கஜேந்திரகுமாரின் குறைபாடு!

உண்மைகளை அறியாமல் தான் நினைத்த மாதிரி பேசுவது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குறைபாடு என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.மாநகரசபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போது ஊடகவியலாளர் ஒருவர் இந்திய அரசியல் தலைவர்களை சந்திக்கவே சீ.வி.விக்னேஷ்வரன் இந்தியா சென்றார். 

என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியதாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குறைபாடு இதுவே. உண்மைகளை அறியாமல் தான் நினைத்தால்போல் பேசுவதாகும். நான் இந்தியா சென்றது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு. எந்த ஒரு அரசியல் சந்திப்புக்கும் செல்லவில்லை என்றார். 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு