கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! சிறுவர்கள் உட்பட 47 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்..

சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்து மரத்துடன் மோதி நின்றுள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த சிறுவர்கள் உட்பட சுமார் 47 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் நானுஓயா - ரதாலை கார்லிபெக் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் பேருந்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள வாசிகசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹொரணையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று, மீண்டும் திரும்பியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வீதியை விட்டு விலகிய பேருந்து, மரத்தின் மீது மோதி நிறுத்தப்பட்டதால்,
ஏற்டவிருந்து பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்தின் தடுப்பு தொகுதி இயங்காமல் போனமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள நானுஓயா பொலிஸார்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.