வழிப்பிள்ளையார் கோவில் உண்டியலில் கைவரிசையை காட்டிய சிறுவர்கள்!

ஆசிரியர் - Editor I
வழிப்பிள்ளையார் கோவில் உண்டியலில் கைவரிசையை காட்டிய சிறுவர்கள்!

வழிப்பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்த 10 வயது, 16 வயது சிறுவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக பெற்றோர் ஆலய நிர்வாகத்திடம் கூறியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். 

நானுஓயா - டெஸ்போட் தோட்டத்தில் வீதி ஓரமாக அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையார் கோவில் உண்டியல் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் உடைக்கப்படும் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்றுகூடிய நிலையில் ஊண்டியல் காணாமல்போயிருந்தது. 

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 10 மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிறுவர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை தாமே திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அத்துடன் திருடப்பட்ட பணத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கூறியுள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு