ஒன்லைன் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் மரணம்!! -உணவகத்தின் மீது வழக்கு பதிவு-
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
பழுதடைந்த இறைச்சி விற்பனை செய்யப்படுவதால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் மறைவதற்குள் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
இணையத்தில் குழிமந்தி என்ற பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட அஞ்சு ஸ்ரீபார்வதி (வயது 20) என்ற இளம்பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
பெண்ணின் பெற்றோர் வழங்கிய மிறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.