இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த இலங்கை அணி!! -தொடரை சமன் செய்தது-
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ரி-20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா, பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை அபாரமாக குவித்தது.
இதையடுத்து 207 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 51 ஓட்டங்களை அடித்து ஆறுதல் அளித்தார். இதேபோல் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல், ஷிவம் மவி இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை எட்ட கடுமையாக போராடினர்.
இறுதி பந்துப்பரிமாற்றத்தில் 21 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், அடித்து ஆட முற்பட்ட அக்சர் பட்டேல் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றார்.
அதன்பின்னர் இறுதி பந்தில் ஷிவம் மவியும் ஆட்டமிழந்தார். அவர் 26 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதி பந்துப்பரிமாற்றத்தில் இந்தியா 4 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இதனால் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இறுதி ரி-20 போட்டி 7 ஆம் திகதி நடைபெற்ற உள்ளது.