கடலரிப்பினால் மீனவர்களின் பாரம்பரியத் தொழிலான 'கரைவலை' அழிக்கப்படுகிறது-
கடலரிப்பினால் மீனவர்களின் பாரம்பரியத் தொழிலான 'கரைவலை' அழிக்கப்படுகிறது-
முஸ்லீம் காங்கிரஸின் வட்டார அமைப்பாளர் எம். எச். நாஸர் விசனம்.
அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக மீனவர்களின் பாரம்பரியத் தொழிலான கரைவலைத் தொழில் முற்றாகப் பாதிக்கப்படுவது. இந்த விடயத்தில் அரசு கூடிய கவனத்திலெடுத்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம். எச். நாஸர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது
கரையோரப் பகுதிகளில் ஒலுவில், நிந்தவூர். காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற பகுதி மீனவர்களின் பிரதான தொழில்களில் கரைவலைத் தொழிலும் காணப்படுகின்றது. கடலரிப்பின் காரணமாக இத்தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் அரசு கண்டும் காணப்படாது இருப்பது கவலையளிக்கிறது. கரையோரப் பகுதிகளை கண்காணிக்கின்ற கரையோரப் பாதுகாப்புத் தினைக்களம் இந்த விடயத்தில் மந்தகதியில் செயற்படுகிறதா என்று என்னத் தோன்றுகிறது.
இக்கடலரிப்பினால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதரத்தை இழந்துள்ளார்கள். இவார்களுக்கு நிவாரணம் வழங்கும் விடயத்தில் அரசு கவணம் செலுத்த வேண்டும். அத்தோடு அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள கடலரிப்பினை தடுக்க அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நாஸர் மேலும் தெரிவித்தார்.