SuperTopAds

புத்தாண்டுக்கு முதல் நாள் ஆணுறை அதிகம் விற்பனை

ஆசிரியர் - Editor II
புத்தாண்டுக்கு முதல் நாள் ஆணுறை அதிகம் விற்பனை

புத்தாண்டுக்கு முதல் நாளான டிசெம்பர் 31 ஆம் திகதி மட்டும் டுரெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2,757 ஆணுறை பாக்கெட்டுகள் விற்பனையானதாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது ட்விட்டரில்   பதிவிட்டு இருந்தது. 

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் அதிக விற்பனை செய்யப்பட்ட உணவு வகைகள் குறித்த பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டு இருந்தது அதில் சந்தேகமே இல்லாமல் அனைவரும் நினைப்பதைப் போலவே பிரியாணியே முதலிடம் பிடித்து இருந்தது. 3.5 இலட்சம் பிரியாணிகள் புத்தாண்டுக்கு முந்தைய நாள் அதாவது டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு 10.30க்குள் விற்பனையாகி இருந்ததாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

அதேபோல் ஐதராபாத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் மட்டும் 15 ஆயிரம் ஆர்டர்கள் வந்து குவிந்ததாகவும் ஸ்விக்கி தெரிவித்து இருந்தது. அதேபோல புத்தாண்டுக்கு முந்தைய நாளில் டொமினோஸ் பிட்சா விற்பனையும் களை கட்டியிருந்தது. 61,287 டொமினோஸ் பிட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருந்ததாகவும் சிப்ஸ் பக்கெட்டுகள் 1.76 இலட்சமும் கிச்சடி உணவை 12,344 பேரும் ஆர்டர் செய்து இருந்ததாக ஸ்விக்கி கூறியிருந்தது.

டுரெக்ஸ் என்ற பிரபலமான நிறுவனத்தின் காண்டம்கள் மட்டும் 2,757 பாக்கெட்டுகள் விற்பனையாகி இருந்ததாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தெரிவித்து இருந்தது. ஸிவிக்கி பதிவை போட்டதுமே நெட்டிசன்கள் பலரும் தங்கள் வழக்கமான பாணியில் கருத்துக்களை பதிவிடத் தொடங்கிருந்தனர். 

இந்த நிலையில், புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு ஆணுறை விற்பனை அதிகமாக இருந்ததாக ஸ்விக்கி வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் டுரெக்ஸ் நிறுவனம் ட்விட் ஒன்றை போட்டுள்ளது