புத்தாண்டு கொண்டாட்டத்தில் காணாமல் போன 30 குழந்தைகள்!! -பதறிய பெற்றோர்-

ஆசிரியர் - Editor II
புத்தாண்டு கொண்டாட்டத்தில் காணாமல் போன 30 குழந்தைகள்!! -பதறிய பெற்றோர்-

சென்னை மெரினாவில் வழக்கம் போல புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த நிலையில் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கருதி கடற்கரை மணலில் இறங்க பொதுமக்களை பொலிஸார் அனுமதிக்கவில்லை.

இதனால் காமராஜர் வீதியில் கூடிய பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். ஆனாலும் கடற்கரை மணலில் கால்பதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்துள்ளார்கள். 

அந்த ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் நேற்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் திரள தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பல குழந்தைகள் காணாமல் போனது.

இதனால் பெற்றோர்கள் தவித்தனர். இவ்வாறு மொத்தம் 30 பேர் காணாமல் போனார்கள். அவர்களை பொலிஸார் தேடி கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு