அனித்தலைவராக இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுப்பார்!! -பாண்டியா குறித்து குமார் சங்ககாரா-

ஆசிரியர் - Editor II
அனித்தலைவராக இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுப்பார்!! -பாண்டியா குறித்து குமார் சங்ககாரா-

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் ரி-20 மற்றும் ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் நாளை மறுதின்ம் 3 ஆம் திகதி முதல் 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடும். 

இந்த தொடருக்கான ரி-20 அணித்தலைவர் சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்த நிலையில் ஹர்திக் குறித்து இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்ககாரா கருத்தை தெரிவித்துள்ளார். 

அணித்தலைமை மாற்றுவது, புதிய தலைமையில் கீழ் விளையாடுவது என்பது எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். ஆனால், ஹர்திக் பாண்ட்யா மிக எளிதாக தனது புதிய அணித்தலைவர் பொறுப்பை கையாள்வார் என்று கருதுகிறேன். 

அணித்தலைமை மாற்றம் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது. அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியம். நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் அணித்தலைமை மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன. 

ஆனால், ஹர்திக் பாண்ட்யாவிடம் அணித்தலைமைக்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு