கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

ஆசிரியர் - Editor II
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே உடல் நலக்குறைவால் தனது 82 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.  

பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை வளங்கப்பட்டு வந்தது.

அண்மை நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள வைத்தியசாலையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தொடந்து சிகிச்சை கொடுத்து வந்தனர். 

புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியது. மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். 

இந்த சூழலில் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு