ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 18 வயதான பெண்ணும், 23 வயதான ஆணும் கைது! வடக்கில் இடம்பெற்ற சம்பவம்...

ஆசிரியர் - Editor I
ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 18 வயதான பெண்ணும், 23 வயதான ஆணும் கைது! வடக்கில் இடம்பெற்ற சம்பவம்...

ஐஸ் போதைப் பொருளுடன் 18 வயதான பெண் ஒருவரும் 23 வயதான ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மன்னார் - பேசாளை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான இருவரும் பேசாளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 

போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட 35,820 ரூபா பணம், தொலைபேசி மற்றும் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

பேசாளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு