கண்டத்தில் இருந்து தப்பித்தேன்!! -விபத்து குறித்து மனம் திறக்கும் மேக்ஸ்வெல்-

ஆசிரியர் - Editor II
கண்டத்தில் இருந்து தப்பித்தேன்!! -விபத்து குறித்து மனம் திறக்கும் மேக்ஸ்வெல்-

அடுத்த வருடத்துக்கான ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் அண்மையில் நடைபெற்று முடிந்தது. 

இதில் ஆர்.சி.பி அணி பல சுவரஸ்யமான ஏலங்களை எடுத்த போதும், அதிரடி நாயகன் க்ளென் மேக்ஸ்வெல் பங்கேற்பாரா என்ற குழப்பத்திலேயே இருந்து வருகிறது. 

ரி-20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்விகளுடன் அவுஸ்திரேலிய அணி வெளியேறியது. இதன் பின் தனது சொந்த ஊருக்கு சென்ற மேக்ஸ்வெல் நண்பர்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, விளையாட்டுத்தனமாக செயல்பட்டு கீழே விழுந்தார். 

அவரின் கால் மீது அவரின் நண்பர் ஒருவரும் விழுந்துவிட்டதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு உடையும் அளவிற்கு சென்றது. இந்நிலையில் இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறியதாவது:- 

சற்று விட்டிருந்தால் அன்றை தினம் எனது காலையே இழந்திருப்பேன். எனினும் கண்டத்தில் இருந்து தப்பி, காயத்துடன் தப்பித்தேன். வாழ்வில் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் நடக்க பழகுவது எவ்வளவு மோசமாக விஷயம் என தற்போது தான் புரிந்துக்கொண்டேன்.

காலில் இருந்த வலிகள் குறைந்து ஓரளவிற்கு நடந்து வருகிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக குணமடைந்து நடக்க ஆரம்பிப்பேன். எனது மனைவி வினி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவரின் உதவியால் நான் மீண்டு வருவேன் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு