காதலி கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு!! -வாயடைத்து நின்ற ரொனால்டோ-

கால்பந்து விளையாட்டு உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கூட்டாளியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (Georgina Rodriguez), அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Dawn) கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அதனைப் பார்த்த ரொனால்டோ வாயடைத்து நின்ற வீடியோ இணையத்தை வைரலாகி வருகிறது.
ரொனால்டோ தனது புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் டானின் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.