SuperTopAds

இணையத்தில் மகளின் ஆபாச வீடியோ!! -தட்டிக்கேட்ட தந்தையை ஒரு குடும்பமே அடித்துக் கொன்ற கொடூரம்-

ஆசிரியர் - Editor II
இணையத்தில் மகளின் ஆபாச வீடியோ!! -தட்டிக்கேட்ட தந்தையை ஒரு குடும்பமே அடித்துக் கொன்ற கொடூரம்-

இந்தியாவின் குஜராத்தில் மகளின் ஆபாச காணொளி தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்த தந்தையான இராணுவ வீரர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரு விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் சக்கலாசி கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனே தொடர்புடைய ஆபாச காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ளான்.

இச்சம்பவம் அறிந்த சிறுமியின் தந்தை, இராணுவ வீரரான அவர் சனிக்கிழமை சக்கலாசி கிராமத்திற்கு சென்று அந்த சிறுவனிடம் விசாரித்துள்ளார். ஆனால் சிறுவனின் குடும்பமே ஒன்று திரண்டு அந்த இராணுவ வீரரை அடித்தே கொன்றுள்ளது.

இராணுவ வீரர் அடித்துக் கொலை

இராணுவ வீரரின் மகளும் அந்த சிறுவனும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர். இது மட்டுமின்றி இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காதல் விவகாரம் தொடர்பில் இராணுவ வீரர் குடும்பத்துக்கு தெரியவர, இது தொடர்பில் சிறுவனின் வீட்டாரிடம் சென்று பேசியுள்ளனர்.

ஆனால் அதன் பின்னரே, சிறுமி தொடர்பில் ஆபாச காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே இராணுவ வீரரை சிறுவனின் குடும்பம் ஒன்று திரண்டு அடித்துக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.