SuperTopAds

பாலமுனையில் மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஆசிரியர் - Editor III
பாலமுனையில் மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும்  தட்டுப்பாட்டை நிவர்த்திக்குமுகமாக  மாபெரும் இரத்ததான முகாம் சபையின் தலைவர் ஏ.எல்.சீத் தலைமையில் இன்று காலை 8.30 - தொடக்கம் மாலை 2.30 மணி  வரை பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடாகி, அதிகளவான இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. 

Palamunai Youths Council இன் ஆலோசகர் வைத்தியர்  SM.றிபாஸ்தீன் JMO  அவர்களின் வேண்டுகோளை ஏற்று உயிர் காக்கும் இந்த உன்னதமான பணியில் 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளில் பதிவு  செய்யப்பட்ட 147 இரத்ததான வழங்குனர்களில் 130 பேர் இரத்ததானம் வழங்கினர்.

இத்தான நிகழ்வானது எமதமைப்பின் கோரிக்கைக்கமைய  றம்யா லங்காவின் பாலமுனை செயற்பாட்டாளர், உளவளத்துணை உத்தியோகத்தர் S.ஆப்டீன் அவர்களின்  ஏற்பாட்டில்,  அஸ்ஸெய்ஹ் அஹ்மத் யாஸீர் (நளீமி) அவர்களின் இணைப்பாக்கத்தில்   Memon Aid அமைப்பினர் இந்த இரத்ததானம் வழங்கிய நபர்களுக்காக ரூபாய் 1500.00 பெறுமதியான 150 உலருணவுப் பொதியினை வழங்கி பிரதான அனுசரணையும் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்ட வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் பகலுணவு மற்றும் உபசார செலவினை அவரது ஐக்கியராச்சியத்திலுள்ள உறவினர்கள் மூலமாக ரூபாய் 30,000/- வழங்கியும் இந்த நிகழ்வின் வெற்றிக்கு பங்களிப்பைச் செய்தார்கள். 

 

இவர்களுக்கான நன்றியினை எஸ். ஆப்தீன் அவர்கள் தனதுரையில் தெரிவித்ததுடன், அவர்களுடைய உதவிக்காக பிரார்த்தனையும் செய்தார். 

அடுத்ததாக, சபையின்  செயற்பாட்டாளர் SK.சிப்கான் மௌலவி யினால் விசேட துஆப் பிராத்தனையுடன் இரத்ததானம் வழங்குவதும்  ஆரம்பமானது. 

அதனைத் தொடர்ந்து இரத்ததான வழங்குனர்களுக்கான  உலர் உணவு அன்பளிப்பு பொதியினை பிரதான அனுசரணையாளர்கள் சார்பாக எஸ்.ஆப்தீன் மற்றும் றம்ய லங்கா செயற்பாட்டாளர்கள்  வழங்கி ஆரம்பித்துவைத்தார்கள். மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் பலரும்  பொதிகளை வழங்கி சிறப்பித்தனர்.

 மேலும் பாலமுனை YMMA கிளை, பாலமுனை செடோ அமைப்பினர்கள் இதற்காக ஒத்துழைப்பும் உதவியும் வழங்கினார்கள். 

இந்த நிகழ்வின் வெற்றிக்காக பங்களித்த  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் மற்றும் பணிக்குழுவினர், றம்ய லங்கா மற்றும் Memon Aid அமைப்பினர்,UK நண்பர்கள்,  YMMA பாலமுனை கிளை, Sedo Palamunai, அக்கரைப்பற்று மெடிக்கல் சென்டர், இல்யாஸ் Hotel, R.றியாஸ் சகோதரர், நிஸ்பர் சகோதரர்  ஆகியோருக்கு அமைப்பின் சார்பாக  மனமார்ந்த நன்றிகளை அமைப்பின் செயலாளர் RM.சாமில் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இரத்ததானம் வழங்கிய சகோதரர் சகோதரிகளுக்காக இறைவன் அருள்பாலிப்பானாக! அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் இந்த தானம் வழங்கிய சகோதரர் சசோதரிகளை அணிதிரட்டி வரவழைக்க பாடுபட்ட சபையினர்  மற்றும் றைஸ்டார் கழகம், அல் அறபா வி.க, மெரூன்ஸ், Titans, எவகிரீம், ஹுசைனியா, கைமா கழகத்தினருக்கும், Ultimates, பிரைட் யூத் அமைப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 குறிப்பாக இவ்விடயத்தில் மும்முரமாக செயற்பட்ட k. நிசார்த்தீன் சகோதருக்கும் மற்றும் உறுப்பினர்களான Y.ஜர்பான்,  A.சாஜித்,  ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எங்களது அழைப்பை ஏற்று ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றிய அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ SMM.ஹனிபா, முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான MA.அன்சில், அக்/மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் அதிபர் KL.உபைதுல்லா, அல்ஹிதாயா மகளிர் கல்லூரியின் அதிபர் B.முஹாஜிரின், Ymma Palamunai கிளைத் தலைவர் I.சிறாஜ், ஆலோசகரும் விரிவுரையாளருமான AH.றிபாஸ், மரண உபகார நிதியப் பணிப்பாளர் IPM.ஜிப்ரி, றம்யா லங்கா அமைப்பின் உறுப்பினர்களான SM.உபைதுல்லாஹ் (Nursing Matron),  ST.றஹ்மத்துல்லாஹ் (Senior Radio Grapher), MA.மாஹிர் (Tr), MI.றியாழ் (GN), மாவட்ட YMMA தலைவர் MIM.றியாஸ் அதிபர், றைஸ்டார் விளையாட்டுக் கழக தலைவர் ILM.பாயிஸ், செடோ தலைவர் Al.றிஸ்மி, பாலமுனை 04 RDS தலைவர் MI.அர்சாத், P1st News MF.பர்சாத், News of Palamunai ஜெஸ்மிர், சமூக செயற்பாட்டாளர் A.ஹில்மி JP  அமைப்பின் செயலாளர் RM.சாமில் ஆசிரியர், உப தலைவர் UL. ஹஸ்ஸாலி முகாமையாளர் IM.ஹம்தான், பொருளாளர் A.றிகாஸ் அகமட், அமைப்பாளர் எம்.ஏ.சிபான், உபதலைவர்களான Kl.றிபான், HM.றுகைமி அகமட் ,  அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்த தான நிகழ்வுக்கு இடத்தை வழங்கிய மஹாசினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் ஆரம்ப நிகழ்விற்கு இடத்தை வழங்கிய ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

அடுத்ததாக இந்த நிகழ்ச்சிக்காக  இதில் பங்கேற்ற ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

இறுதியில்,  இந்த இரத்ததான நிகழ்வின் வெற்றிக்கு உடலாளும் பொருளாலூம் நேரத்தாலும் பங்களிப்பை வழங்கி உதவிய அமைப்பினர்கள்,ஆர்வலர்கள்     அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றோம். 

ஜஸாக்கல்லாஹூகைரன்