SuperTopAds

மணப்பெண் கிடைக்காததால் விரக்தி!! -இளைஞர்கள் திருமண வேடத்தில் நூதன போராட்டம்-

ஆசிரியர் - Editor II
மணப்பெண் கிடைக்காததால் விரக்தி!! -இளைஞர்கள் திருமண வேடத்தில் நூதன போராட்டம்-

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள் பலர் திருமண வேடத்தில் குதிரையில்வாத்தியங்கள் முழங்கியபடி, ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் சென்றனர். 

இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஏதோ கூட்டு திருமண விழா நடக்கப்போவதாக நினைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் நூதன போராட்டம் செய்தது பின்னர் தான் தெரியவந்தது. 

மாவட்ட ஆட்சியாளரை சந்தித்த அவர்கள், திருமண வயதை கடந்தும் தங்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் தங்களுக்கு அரசே மணப்பெண்கள் பார்த்து தர வேண்டும் என்ற நூதன கோரிக்கை மனுவையும் அவரிடம் கொடுத்தனர். 

இதனால் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் தற்போது பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அடிப்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.