கண்மூடித்தனமான வரி அறவீடு! மிக தவறு என சாடியுள்ள இறைவரி திணைக்களம் கழிக்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க பணிப்பு, முல்லைத்தீவில் ஒரு ஆசிரியருக்கு நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கண்மூடித்தனமான வரி அறவீடு! மிக தவறு என சாடியுள்ள இறைவரி திணைக்களம் கழிக்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க பணிப்பு, முல்லைத்தீவில் ஒரு ஆசிரியருக்கு நடந்த சம்பவம்..

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு அவர் பெறும் சம்பளத்தில் “உழைக்கும்போது செலுத்தும் வரி” அறவிட்டமை தவறு என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வடமாகாண கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியர் ஒருவருடைய மாத சம்பளத்தில் உழைக்கும்போது செலுத்தும் வரி அறவீட்டு முறையின் கீழ் 18 ஆயிரத்து 401 ரூபா கழிக்கப்பட்டுள்ளது. 

எனினும் 2018, 2019 வரி மதிப்பீட்டுக்கான உள்நாட்டு வருமானவரிச் சட்ட ஏற்பாடுகளின் படி உழைக்கும்போது செலுத்த வேண்டிய வரி அளவீட்டு முறைக்கு மாறாக தன்னுடைய சம்பளத்திலிருந்து வரி அறவிடப்பட்டுள்ளமை தொடர்பில் ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஏற்பாடுகளின் படி உழைக்கும்போது செலுத்த வேண்டிய வரி அறவீட்டு சுற்று நிருபங்களை முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம் உரிய முறையில் பின்பற்றவில்லை என தெரிவித்து குறித்த ஆசிரியரால் இறைவரித் திணைக்களத்திற்கு எழுத்து மூல கடிதமும் அனுப்பப்பட்டது.

குறித்த கடிதத்தை ஆமோதித்துள்ள இறைவரி திணைக்களம் முறைப்பாட்டாளரான ஆசிரியரின் சம்பள வரியை அறவிட்ட முறை தவறு என சுட்டிக்காட்டியதுடன் கழிக்கப்பட்ட சம்பள வரியை மீள வழங்குமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தலையும் வழங்கியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு