கொரோனாக்கு பாய்ந்து 3 வருடங்களாக வீட்டு அறைக்குள் முடங்கியிருந்த தாய்யும், மகளும்!! -கதவை உடைத்து மீட்ட பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
கொரோனாக்கு பாய்ந்து 3 வருடங்களாக வீட்டு அறைக்குள் முடங்கியிருந்த தாய்யும், மகளும்!! -கதவை உடைத்து மீட்ட பொலிஸ்-

கொரோனா தங்களை தாக்கி விடும் என்ற அச்சத்தில் வீட்டு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்ட தாயும் மகளும் 3 வருடங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குய்யேரு கிராமத்தைச் சேர்ந்த கர்நீதி சூரிய பாபு என்பவரின் மனைவி மணி (வயது 44) மற்றும் மகள் துர்கா பவானி (வயது 20)  ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவும், தங்களை யாரேனும் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும் சுமார் மூன்று ஆண்டுகள் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியேறாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

கணவர் சூரிய பிரபு மட்டும் வெளியே சென்று உணவு பொருட்கள் வாங்கி வந்து சமைத்து வீட்டின் ஜன்னல் வழியாக மனைவி மற்றும் மகளுக்கு தொடர்ந்து சாப்பாடு வழங்கி வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும், மணி மற்றும் துர்கா பவானி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன் சூரிய பிரபுவை ஜன்னல் வழியாக உணவு வழங்கவும் இருவரும் அனுமதிக்கவில்லை, இதனால் அருகாமையில் உள்ள மற்றொரு வீட்டில் கணவன் தங்கி சமைத்து, அதை வீட்டின் கதவின் அருகே வைக்க, அதன் பிறகு அதை உள்ளே எடுத்து சென்று இருவரும் சாப்பிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் இருவரின் உடல் நிலையும் மோசமடையவே, கணவர் சூரிய பிரபு உள்ளூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள், மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.

இதையடுத்து மணி மற்றும் துர்கா பவானி இருவரையும் மீட்க வந்த பொலிஸாரும், சுகாதாரத்துறை ஊழியர்களும் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தனர், ஆனால் உறவினர்கள் யாரோ தங்களை கொலை செய்ய வந்து இருப்பதாக கருதி கதவை திறக்க மறுத்துவிட்டனர்.

பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மீட்பு பொலிஸார் மனைவி மணி மற்றும் மகள் துர்கா பவானி இருவரையும் மீட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு