கல்முனை கடற்கரைப் பள்ளி 201 ஆவது கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்
கல்முனை கடற்கரைப் பள்ளி 201 ஆவது கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 201ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
டிசம்பர் 24 ம் திகதி(சனிக்கிழமை ) ஆரம்பமாக உள்ள இவ் 201 ஆவது கொடியேற்ற விழாவினை இம் முறை சிறப்பாக நடாத்துவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக கொடியேற்ற விழா நடைபெறுகின்ற 12 நாட்களும் திண்மக்கழிவகற்றல் மின்னொளியூட்டல் மற்றும் பொது வசதிகள் அலங்கார ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தையும் துரிதமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அரச வர்த்தமானி பத்திரிகை மூலம் தேசிய கலாசார விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 201 ஆவது வருடாந்த கொடியேற்று விழா சனிக்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக 12 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கொடி இறக்கும் தினமாகிய 05.01.2023 ஆம் திகதி வியாழக்கிழமை லுஹர் தொழுகையின் பின்னர் மாபெரும் கந்தூரி அன்னதானமும் வழங்கப்பட்டு மாலை 5 மணியளவில் புனித கொடி இறக்கப்படவுள்ளமையும் சுட்டிக்காட்டத்க்கது.