அர்ஜென்டினா, பிரான்ஸ் சீருடை அணிந்த புதுமண தம்பதி
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்ற 18 ஆம் திகதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
திருவனந்தபுரத்தை சேர்ந்த இருவருக்கும் எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் இருவரும் தீவிர கால்பந்தாட்ட ரசிகர்கள். மணமகன் சச்சின் கம்மத் அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர். மணப்பெண் ஆதிரா பிரான்ஸ் வீரர் எம்பாபெயின் ரசிகர்.
திருமணநாளில் அர்ஜென்டினா- பிரான்ஸ் இறுதிப்போட்டி நடைபெற்றதால் மணமக்கள் இருவரும் திருமணத்திற்கான பட்டாடையுடன் தங்களது விருப்பப்பட்ட அணி வீரர்களின் சீருடையை (ஜெர்சி) மேலாடையாக அணிந்து கொண்டு மேடைக்கு வந்தனர். தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்தது.