யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தத்தளிக்க படகு மீட்கப்பட்டு காங்கேசன்துறை நோக்கி நகர்த்தப்படுவதாக தகவல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தத்தளிக்க படகு மீட்கப்பட்டு காங்கேசன்துறை நோக்கி நகர்த்தப்படுவதாக தகவல்...

யாழ்.மருதங்கேணி - கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

படகில் இருப்பவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வடமராட்சிக் கிழக்கு கடலில் படகு ஒன்று பழுதடைந்த நிலையில் கரையொதுங்குவதாகவும்,

படகில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை  மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனை அவதானித்த கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் கடற்படைக்கு அறிவித்த நிலையில்,  குறித்த படகிலிருந்தவர்களை மீட்க்கும் பணிகளுக்காக 4 கடற்படைக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து படகிலுள்ள மக்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனிடையே மீட்கப்பட்ட படகில் இருக்கும் சேதம் காரணமாக விரைந்து பயணிக்க முடியாத காரணத்தாலும் வெளிநாட்டவர்கள் என்பதனால் இதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதங்களினாலும் 

குறித்த படகு இன்று அதிகாலை வரை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்படாதமையினால் இதன் மேலதிக விபரங்கள் எவையும் கிடைக்கவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு