விளையாட்டின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவேன்!! -அமைச்சராக பதவியேற்ற உதயநிதி சபதம்-
தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றுவேன் என்று தமிழக சட்டசபையின் புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் சபதம் எடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன். அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படம். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.
விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது, செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க முடியும் என்றார்.