தமிழக அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி
தி.மு.க கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று புதன்கிழமை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி தமிழக அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது.