நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் பெயரை இதற்காகத்தான் நிராகரித்தோம்! உதய கம்மன்பில நாடாளுமன்றில் ஆவேசம்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் பெயரை இதற்காகத்தான் நிராகரித்தோம்! உதய கம்மன்பில நாடாளுமன்றில் ஆவேசம்..

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது அது தவிர்க்கப்பட்டது இனவாதத்தால் அல்ல. என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார். 

பாராளுமன்றில் நேற்று இந்த கருத்தை அவர் வெளியிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர் எதிர்க்கட்சி தரப்பில் தவிர்க்கப்பட்டமை இனப்புறக்கணிப்பு 

எனவும் சிங்களவர்களின் பெரும்பான்மைவாதம் என்ற அடிப்படையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, நேற்று கருத்து வெளியிட்டதாக தெரிவித்தே, உதய கம்மன்பில தமது கருத்தை வெளியிட்டார்.

அதிகாரப்பரவலாக்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாதீட்டுக்கான வாக்கெடுப்பை தவிர்த்தது.

இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்தநிலையில் அவர்களின் பெயர் அரசியல் அமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டால், 

அவர்கள் அந்த பேரவையையும் அதிகாரப்பரவலாக்கல் விடயத்துக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதற்காகவே சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, 

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அதற்கு எதிராக தமது பெயரை பரிந்துரைத்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு