வெளியீட்டுக்கு முன்பே சாதனை படைத்த அவதார் 2

ஆசிரியர் - Editor II
வெளியீட்டுக்கு முன்பே சாதனை படைத்த அவதார் 2

எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 160 மொழிகளில் வெளிவரவுள்ள அவதார் 2 படம் வெளிவருவதற்கு முன்பே சாதனை படைத்துள்ளது. 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009 இல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. 

தற்போது அவதார் படத்தின் 2 ஆம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், எதிர்வரும் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவு அண்மையில் இந்தியாவில் தொடங்கியது. இதையடுத்து வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி தற்போது வரை 10 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. 

வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்பதிவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு