தென்பகுதி மீனவா்களை வெளியேற்றக்கோாி வடமராட்சி கிழக்கு மீனவா்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
தென்பகுதி மீனவா்களை வெளியேற்றக்கோாி வடமராட்சி கிழக்கு மீனவா்கள் போராட்டம்..

வடமராட்சி கிழக்கிலிருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மே ளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது. 

வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை தொழிலை செய்து வருகின்றனர். இதனை வடமராட்சி கிழக்கு மீன வர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தின் முன்பாக கூடிய பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் பிரதான வீதி வழியாக யாழ்.மாவ ட்ட செயலகத்தை அடைந்து மாவட்ட செயலகம் முன்பாக 

கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்ததுடன் தென்பகுதி மீனவர்களை உடன் வெ ளியேற்றக்கோரி யாழ்.மாவட்ட செயலருக்கு மகஜர் ஒன்றை கையளித்தனர். இதனை தொடர் ந்து வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற மீனவர்கள்,

ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியதுடன், ஆளுந ரின் இணைப்பு செயலாளர்களிடம் ஆளுநருக்கான மகஜர் ஒன்றிணை கையளித்தனர். தொ டர்ந்து யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின்

முன்பாக கூடிய மீனவர்கள் தென்பகுதி மீனவர்களை வெளியேற்று, தென்பகுதி மீனவர்களிட ம் லஞ்சம் வாங்காதேன, கடற்றொழில் பணிப்பாளரை வெளியேற்று என கோஸங்களை எழு ப்பிக் கொண்டிருந்தனர். இதனால் மீனவர்களை சந்திப்பதற்கு

கடற்றொழில் நீர்யல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் மறுப்பு தெரிவித்தார். பின்னர் ஒரு வாறாக மீனவர்கள் சிலர் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அமைவாக பின்னர் மகஜரினை அவர் பெற்றுக் கொண்டார். 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு