வலுவிழந்தது 'மாண்டஸ்' புயல்
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மாண்டஸ் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 260 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மாமல்லபுரம் அருகே இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புயல் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 85கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.