டெல்லியில் பா.ஜ.வின் ஆட்டம் முடிந்தது!! -மாநகராட்சியை முதல் முறை கைப்பற்றும் ஆம்ஆத்மி கட்சி-

ஆசிரியர் - Editor II
டெல்லியில் பா.ஜ.வின் ஆட்டம் முடிந்தது!! -மாநகராட்சியை முதல் முறை கைப்பற்றும் ஆம்ஆத்மி கட்சி-

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களை விட கூடுதலான இடங்கயில் முன்னிலை வகித்துள்ளது. இதன் மூலம் டெல்லி மாநகராட்சியை அக்கட்சி முதன்முறையாக கைப்பற்றுகிறது.

மொத்தமாக 250 வட்டாரங்களுக்கான டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்றது. அதில் 50.47 சதவீத வாக்குகளே பதிவானது. பதிவான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமானது. ஆரம்பத்தில் பா.ஜ சற்று முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் ஆம்ஆத்மி கட்சி அதிக இடங்களில் முந்தி சென்றது.

குறிப்பாக பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களை விட ஆம்ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் டெல்லி மாநகராட்சியை அக்கட்சி கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இதன்மூலம் கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பா.ஜ.,விடம் இருந்து ஆம்ஆத்மி முதன்முறையாக கைப்பற்றுகிறது. டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியதை தொடர்ந்து, டெல்லி முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு