50 வயது நபராக நடிக்கும் தளபதி விஜய்! -தளபதி 67 படத்தின் கதை வெளியானது-

ஆசிரியர் - Editor II
50 வயது நபராக நடிக்கும் தளபதி விஜய்! -தளபதி 67 படத்தின் கதை வெளியானது-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தளபதி 67 இல் அமைந்துள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில் இருந்து இதுவரை எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லை.

இந்த சமயத்தில் தளபதி 67 படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வன்முறையின் வரலாறு எனும் படத்தின் தழுவல் தான் தளபதி 67 என கூறப்பட்டது. ஏறக்குறைய அது உறுதியான தகவல் தான் என்றும், அதே சாயலில் தான் தளபதி 67 கதை அமைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தளபதி 67 கதைப்படி 50 வயதான கதாநாயகன் தளபதி விஜய், தனது மனைவி மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அசபாவிதம் நடக்கிறது. இதனால் அமைதியாகி வாழ்ந்து வந்த கதாநாயகனின் வாழ்க்கை வன்முறைக்கு எப்படி செல்கிறது என்பதே தளபதி 67 படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு