ரெண்டிங்கில் அசத்தும் 'வாரிசு' படத்தின் 'தீ தளபதி' பாடல்

ஆசிரியர் - Editor II
ரெண்டிங்கில் அசத்தும் 'வாரிசு' படத்தின் 'தீ தளபதி' பாடல்

தமிழ் சினிமாவல் முன்னணி நடிகராக வலம்வரும் தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் 'தீ தளபதி' பாடல் வெளியாகியுள்ளது. சிம்பு பாடியுள்ள இந்தப்பாடலை விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

அண்மையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை தளபதி விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாட, பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார். 

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'தீ தளபதி' படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்; விவேக் பாடலை எழுதியுள்ளார். தளபதி விஜய் நடித்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தளபதி விஜய்யின் 30 ஆண்டு திரைத்துறை பயணத்தை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு