SuperTopAds

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி!! -ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பக்தர்கள் தங்க விடுதி அமைப்பு-

ஆசிரியர் - Editor II
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி!! -ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பக்தர்கள் தங்க விடுதி அமைப்பு-

சபரி மலைக்கு குழுவாக வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்காக விருந்தினர் மாளிகையில் கூடுதல் அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.

சபரிமலையில் நடை திறந்த நவம்பர் 16 ஆம் திகதி முதல் இன்று வரை 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு இருமுடி கட்டி வந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சபரிமலை வரும் பக்தர்கள் தங்க கோவில் நிர்வாகம் சார்பில் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோவிலில் உள்ள விருந்தினர் மாளிகையில் பக்தர்கள் தங்க கூடுதல் அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.

இங்குள்ள அறைகளில் 454 அறைகளை பக்தர்கள் உடனடி முன்பதிவு மூலம் பெற்று கொள்ளலாம். 104 அறைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சபரிமலைக்கு குழுவாக வரும் பக்தர்கள் தங்குவதற்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகம் தற்போது கூடுதல் ஏற்பாடுகள் செய்துள்ளது.

அதன்படி கோவிலில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஒரே நேரத்தில் 17 ஆயிரத்து 17 பேர் தங்க பிரமாண்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் குழுவாக வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.