SuperTopAds

வீதியால் சென்றவர்களை மறித்து சோதனை செய்யபோவதாக கூறி சண்டித்தனம் செய்த அரச ஊழியர்கள்! இளைஞன் படுகாயம், மற்றொரு இளைஞன் கைது, பொலிஸார் அசமந்தம்..

ஆசிரியர் - Editor I
வீதியால் சென்றவர்களை மறித்து சோதனை செய்யபோவதாக கூறி சண்டித்தனம் செய்த அரச ஊழியர்கள்! இளைஞன் படுகாயம், மற்றொரு இளைஞன் கைது, பொலிஸார் அசமந்தம்..

சிவில் உடையில் இருந்த வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன், குறித்த இளைஞனின் சகோதரன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் மாங்குளம் நகருக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

வீதியில் சென்ற இளைஞரை மறித்த சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இளைஞரை சோதனை செய்ய முயற்சித்துள்ளனர். 

இதன்போது நீங்கள் யார் என்று வினவி அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியபோது அடையாள அட்டை காண்பிக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவிக்கின்றார். 

இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த இளைஞரின் அண்ணா அதிகாரிகளிடம் அடையாள அட்டை காண்பிக்குமாறு முரண்பட்டவேளை சிவில் உடையில் இருந்த ஒருவர் சிவில் பாதுகாப்பு திணைக்கள அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.

இதன்போது சிவில் உடையில் வீதியால் செல்பவர்களை மறித்து சோதனையிட உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது என்ற வாக்குவாதம் இடம்பெற்று அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தாக்குதல் நடத்திய நிலையில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்போது சம்பவ இடத்திற்கு மாங்குளம் காவல்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதன்போது சிவில் உடையில் இருந்த குறித்த இருவரும் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட சகோதரர்கள் கூறிய நிலையில் காயமடைந்த இளைஞரின் சகோதரனை பொலிஸ் நிலையம் அழைத்து சென்ற பொலிஸார்,

இளைஞனை கைது செய்துள்ளனர். இதேவேளை சிவில் உடையில் இருந்த வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர் ஆகியோர்  வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். 

இந்நிலையில் பொலிஸாரின் இந்த இந்த செயற்ப்பாடு மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ( இரானுப்பிரிவை சேர்ந்தவர்) சிவில் நிர்வாகம் நடைமுறையில் உள்ளபோது எவ்வாறு மக்களை சோதனையிட முடியும்?

அதேவேளை வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வந்தால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது அவர்களுடைய சீருடையில் வருகைதர வேண்டும் இவ்வாறு சிவில் உடையில் வந்து 

வீதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் இளைஞர்களுடன் முரண்பட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை செய்ய கூடாது எனவும் இவ்வாறு பொறுப்பற்றதனமாக கடமையாற்றும் அதிகாரிகள் மீது 

திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.