ஓநாய் நோயால் அவதிப்படும் இளைஞர்

ஆசிரியர் - Editor II
ஓநாய் நோயால் அவதிப்படும் இளைஞர்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் முகம் மற்றும் உடலெங்கும் அதிக அளவில் ரோமம் வளரும், 'ஓநாய் நோய்' எனப்படும் விசித்திரமான நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. 

மரபியல் கோளாறால் 'ஹைபர்டிரிகோசிஸ்' எனப்படும், ஓநாய் நோய் மிகவும் விசித்திரமாக ஏற்படும். இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் மரபணு குறைபாடுகளால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சையும் இல்லை. 

மத்திய பிரதேச மாநிலம் நான்ட்லெடா கிராமத்தைச் சேர்ந்த, லலித் படிதார் என்ற இளைஞர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சிறு வயதிலேயே உடல் முழுதும் அவருக்கு ரோமம் வளரத் ஆரம்பித்தது. 

தன்னுடைய 7 வயது வரை இதை ஒரு பெரிய பிரச்னையாக லலித் படிதார் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ரோமம் அதிகளவில் வளர ஆரம்பித்ததும் ஊரில் உள்ளவர்கள் தன்னைப் பார்த்து பயப்படுவது, உதாசீனப்படுத்துவது போன்றவற்றால், இது மிகப் பெரிய பிரச்னை என்பது அவருக்கு தெரியவந்தது. 

இந்த நோய்க்கு தற்போதைய நிலையில் எந்த சிகிச்சையும் இல்லை. அடிக்கடி 'ஷேவ்' செய்வது அல்லது முடியை நீக்கும் மற்ற முறைகளை பயன்படுத்துவது மட்டுமே தீர்வாகும். இவருடைய குடும்பத்தில் யாருக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டதில்லை. 

இதனால், பாடசாலை கல்வியை பாதியிலேயே நிறுத்தியுள்ள அவர், பொது வெளியில் நடமாடுவதை முழுதாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கியுள்ளார். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு