ஒரே குடும்பத்தில் 4 பேர் குத்திக்கொலை -போதைக்கு அடிமையான இளைஞர் செய்த வெறிச் செயல்-

ஆசிரியர் - Editor II
ஒரே குடும்பத்தில் 4 பேர் குத்திக்கொலை -போதைக்கு அடிமையான இளைஞர் செய்த வெறிச் செயல்-

டெல்லியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் ஒரு வீட்டில் இருந்து குடும்பத்தினர் நான்கு பேரை குத்திக் கொலை செய்த பயங்கர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அயலவர்கள் அங்கு ஓடிச்சென்றனர். அப்போது வீட்டில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள் இதுகுறித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த வீட்டில் தரை பகுதியில் ஒரு பெண், குளியறையில் 2 பேர் உள்பட 4 பேரை மீட்டுள்ளனர். 

உடல்களை கைப்பற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த 25 வயதான கேசவ் என்ற இளைஞர் தனது 50 வயதான தந்தை தினேஷ், தாய் தர்சனா, மற்றும் 75 வயதான பாட்டி தீவானா தேவி, 18 வயதான தங்கை ஊர்வசி ஆகியோரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது கண்டு பிடிக்கப்பட்டது.

கொலையாளி கேசவ் போதை பொருட்களுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. வீட்டில் நடந்த சண்டையே இந்த கொலைக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு