யாழ்ப்பாணம் - மன்னார் வீதி வழியாக டிப்பரில் கடத்தப்பட்ட 70 லட்சம் பெறுமதியான கஞ்சா! 2 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - மன்னார் வீதி வழியாக டிப்பரில் கடத்தப்பட்ட 70 லட்சம் பெறுமதியான கஞ்சா! 2 பேர் கைது..

டிப்பர் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 70 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா வெள்ளாங்குளம் பகுதியில் கடற்படையினால் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மன்னார் - யாழ் பிரதான வீதியின் வெள்ளங்குளம் வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான டிப்பர் ஒன்றை மறித்து சோதனையிட்டதில் டிப்பரில் இருந்து சுமார் 24 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது வவுனியாவை சேர்ந்த 37 மற்றும் 45 வயதான இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் லொறியுடன் இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு