பெற்ற குழந்தைகளை கைவிட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி!! -தேடிப்பிடித்து கொலை செய்த சகோதரர்கள்-

ஆசிரியர் - Editor II
பெற்ற குழந்தைகளை கைவிட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி!! -தேடிப்பிடித்து கொலை செய்த சகோதரர்கள்-

குழந்தைகளை கைவிட்டு ஓடிச் சென்ற கள்ளக்காதல் ஜோடி தேடிப்பிடித்து கொலை செய்த சகோதரர் பொலிஸ் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அருகே உள்ள ஆசாரா கிராமத்தைச் சேர்ந்த திருமணவர்களான 30 வயதான ஆரிப் என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான மஹ்ஜபீன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

ஆரிபுக்கு 3 பெண் குழந்தைகளும், மஹ்ஜபீனுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில் இந்த கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி விட்டனர். 

இருவரும் கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்தனர். மேலும் இருவரையும் உறவினர்கள் மற்றும் பொலிஸார் தேடி வந்தனர். இருந்வரும் மீரட் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

மஹ்ஜபீன் சகோதரர்கள் இருவரையும் கிராமத்துக்கு அழைத்து வந்தனர். இரவில், சிறுமியின் சகோதரர்கள் இருவரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர்களை கொலை செய்தனர்.

இருவரின் உடலையும் அசரா கிராமத்தின் காட்டிலும் வீசி எறிந்தனர். இருவரையும் கொன்றுவிட்டு, சிறுமியின் சகோதரர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். 

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு