10 நாளில் மரிப்பேன்: 3 ஆவது நாளில் உயிர்த்தெழுவேன்!! -பாதிரியாரின் திகில் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
10 நாளில் மரிப்பேன்: 3 ஆவது நாளில் உயிர்த்தெழுவேன்!! -பாதிரியாரின் திகில் அறிவிப்பு-

ஆந்திர மாநிலத்தில் உள்ள பாதிரியார் ஒருவர் தாந் 10 நாளில் மரிப்பேன் என்றும், மூன்று நாட்டிகளில் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று எழுதப்பட்ட அறிவித்தலை வெளியிட்டமை பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 

குறித்த மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் கண்ணவரம் அருகே கொல்லனபள்ளி சர்ச்சில் பாதிரியார் ஒருவர் திடீரென்று, நான் 10 நாளில் இறந்து விடுவேன், பின்னர் 3 ஆவது நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று பேசத் தொடங்கியுள்ளார்.

அத்துடன், தனக்கு சொந்தமான நிலத்தில் சமாதி கட்டுவதற்கு குழி ஒன்றை தோண்டி அதன் அருகில், அவர் இறந்து விட்டது போன்ற பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர், செய்வதறியாது தவிக்கின்றனர்.

ஆனாலும் பாதிரியாரோ 'இன்னும் 10 நாளில் இறந்து, அடுத்த 3வது நாளில் நான் உயிர்த்தெழுவேன்' என்று விடாப்பிடியாக கூறி வருகிறார். இந்த நவீன யுகத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கை உள்ளதா என்று அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு