கனடாவை அதிரவைத்த தொடர் திருட்டு சம்பவம்!! -பொலிஸாரிடம் சிக்கிய தமிழ் இளைஞர்-
கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் தொடர் வாகனத்திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் தமிழர் ஒருவர் உட்பட ஒரு குழுவை கைது செய்துள்ளனர்.
இக் கைதுச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
இது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் 12 பேரை கைது செய்ததோடு அவர்கள் மீது 100 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான 19 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளதாகவும், மேலும் 5 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 50 திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றின் வாகன அடையாள இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பிராம்டனைச் சேர்ந்த 21 வயதுடைய ஆயுப் அப்தி மீது ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த 19 வயதான லெனாக்ஸ் கிரான்ட், விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டவர்களில் வயதில் குறைவானவர் என கூறப்படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கையில் கைதானவர்களில் மூத்தவர் ஆதவன் முருகேசபிள்ளை என்ற 30 வயதான நபர். அவர் மோசடி மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் புகார் அல்லது தகவல் தெரிவிக்க விரும்பினால், பொலிஸாரை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.