தடுத்துவைக்கும் உத்தரவில் கையெழுத்திட மறுத்த ஜனாதிபதி!

ஆசிரியர் - Admin
தடுத்துவைக்கும் உத்தரவில் கையெழுத்திட மறுத்த ஜனாதிபதி!

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது – மாணவ தலைவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திட ஜனாதிபதி மறுத்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பு ரீதியாக தன்னை ஜனாதிபதியாக இணைத்துக்கொண்டு நான்கு மாதங்களின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் ரீதியிலும் மற்றைய வகையிலும் பல மாற்றங்களிற்கு தலைமை தாங்குகின்றார்.

இந்த வாரம் அவர் இரு மாணவ தலைவர்களான அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைகழக பிக்குமார்மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்மதேரர் ஆகியோரை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்துவைப்பதற்கான உத்தரவில் கையnழுத்திட ஜனாதிபதி மறுத்தார்.

அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

அதேநாளில் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் மாணவ தலைவர்களை விடுதலை செய்யக்கோரி ஐநா அலுவலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்இ அவர்களை கலைப்பதற்கு நீர்த்தாரை கண்ணீர்புகைபிரயோகம் இடம்பெற்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்களை தடுத்துவைப்பதற்கான முன்னையை உத்தரவில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண கைச்சாத்திட்டிருந்தார். அவர் தற்போது இராணுவபாதுகாப்பு குழுவொன்றுடன் பாக்கிஸ்தானிற்கு விஜயமமேற்கொண்டிருந்தார் தற்போது அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான வழக்குகளை அரசாங்கம் எதிர்காலத்தில் எவ்வாறு கையாளும் என்ற கேள்விக்கு நாட்டின் வழமையான சட்டங்களின் அடிப்படையில் இந்த வழக்குகள் கையாளப்படும் என அரசாங்க வட்டாரமொன்று தெரிவித்தது.

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்துவதிலிருந்து அரசாங்கம் விலகிச்செல்லும் எனவும் அரசதகவல்கள் தெரிவித்தன.

இலங்கை இந்த சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என வெளிநாட்டிலும் எதிர்கொண்டுள்ள விமர்சனங்களே இதற்கு முக்கிய காரணம்.

காலிமுகத்திடலிலும் அலரிமாளிகைக்கு வெளியேயும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இரு மாணவ தலைவர்கள் கைதுசெய்யப்பட்டமை இந்த விவகாரத்தை மேலும் பிரச்சினைக்குரியதாக மாற்றியுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு