தமிழ்தேசிய கூட்டமைப்பின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? பங்காளி கட்சிகள் கூடி நேற்று ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? பங்காளி கட்சிகள் கூடி நேற்று ஆராய்வு..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தல் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில்  கூட்டமைப்பினராக ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக பயணிக்க வேண்டுமென கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு, ரெலோ, புளொட் கட்சித் தலைவர்கள் கூட்டம் கொழும்பில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழரசு சார்பில் கட்சின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், 

ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான கோவிந்தம் கருணாகரன்(ஜெனா) மற்றும் கென்றி மகேந்திரம் ஆகியோரும் புளொட் சார்பில் அதன் முக்கியஸ்தர் இராகவனும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்துமே அதிகம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி முலண்பாடுகள், ஒற்றுமையின்மை, கூட்டமைப்பின் செயற்பாடுகள் முமையாக மக்கள் மத்தியில் செல்லாமை 

போன்ற காரணங்களாலே இந்த பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய காரண்ஙளால் கூட்டமைப்பிற்கு 35 வீத வாக்குகளே கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில் அடுத்து வரும் தேர்தல்களில் அவற்றைச் சீர் செய்து கொள்ளவேண்டுமென்றும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் செய்வதற்கு கூட்டமைப்பிற்குள்யே முழுமையானதொரு ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவ்வாறு நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்பட்டால் எதிர்காலத்தில் பின்னடைவுகளைத் தவிர்த்துக் கொள்ள முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்து வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வதென்றும் அதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு