அச்சுறுத்தினால் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்!! -எதிரி நாடுகளுக்கு வடகொரிய ஜனாதிபதி மிரட்டல்-
அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க வகையில் எதிரி நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய ஜனாதிபதி பகிரங்க அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
வடகொரியா அண்மைக்காலமாக ஏவுகனை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகொரியா வீசிய ஏவுகனை ஒன்று தென் கொரியா எல்லை அருகே விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகனை சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா ஜனாதிபதி ஜிம்ஜாங் உன், அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனையை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும் போது, வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தி தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும், இந்த அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு முழுமையான மோதலை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அச்சுறுத்தல்கள் பகைமை கொள்கையை தொடர்கிறது. இது அணு ஆயுத தடையை எதிர்த்து பெரிய அளவில் சோதனை செய்ய வடகொரியாவை தூண்டி வருகிறது.