யாழ்.பல்கலைகழக இந்து பீடத்திற்கு வருடாந்தம் 100 மாணவர்களை உள்ளீர்க்க திட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக இந்து பீடத்திற்கு வருடாந்தம் 100 மாணவர்களை உள்ளீர்க்க திட்டம்!

யாழ்.பல்கலைக் கழகத்தின் இந்து பீடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு வருடந்தோறும் சுமார் 100 மாணவர்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் துறைசார் அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்தவிற்கும் இடையில் கடந்த(14.11.2022) அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் 

மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து நாகரீகம், சமஸ்கிருதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகிய கற்கைநெறிகளைக் கொண்ட தனித்துவமான பீடமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு 'இந்து பீடம்' உருவாக்கப்பட்ட போதிலும், 

தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாமையினால் செயற்படுத்த முடியாமல் இருந்த நிலையிலேயே தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் 

குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு