தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பம்! அடுத்த வருட இறுதிக்குள் தீர்வு, டக்ளஸ் ஆரூடம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பம்! அடுத்த வருட இறுதிக்குள் தீர்வு, டக்ளஸ் ஆரூடம்..

வடமாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காண்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச ஜனாதிபதி தீர்மானத்துள்ளார். என கூறியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

கடந்தகால கசப்பான அனுபவங்களில் இருந்து மீள்வதற்கு தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டிருக்கின்றார். 

இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைத்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தினை தற்போதுள்ள தமிழ்த் தலைவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தாமும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு