உயிரிழந்த ராஜீவ்காந்தியின் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன்!! -விடுதுலையான நளினி உருக்கம்-

ஆசிரியர் - Editor II
உயிரிழந்த ராஜீவ்காந்தியின் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன்!! -விடுதுலையான நளினி உருக்கம்-

குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன் என்று விடுதலையான நளினி உருக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தமிழிழ விடுதலைப் புலிகள் தற்கொலைப்படையால் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று சனிக்கிழமை சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர். வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் இருந்து முதலில் நளினி வெளியே வந்தார். பின்னர் ஆண்கள் சிறைச்சாலையில் இருந்து முருகன், சாந்தன் இருவரும் வெளியே வந்தனர். அங்கு வந்த நளினி முருகன் கையை பிடித்து நளினி கண்ணீர் மல்க வரவேற்றார்.

முருகன், சாந்தன் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை பொலிஸார் திருச்சியில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றனர். நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். பின்னர் நளினி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1991 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியான ராஜீவ் காந்தி மற்றும் பொலிஸார் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மிகவும் வருந்துகிறேன், நாங்கள் அதை நினைத்து பல வருடங்கள் வருத்தப்பட்டோம்.

ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் என்னைச் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் என்னைப் பார்க்க வேண்டிய நேரம் கடந்து விட்டதாக நான் நினைக்கிறேன். அவர்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துவிட்டனர். அந்த சோகத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு