SuperTopAds

முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி-பாம்புகள் ஆமைகள் வெளியேறல்

ஆசிரியர் - Editor III
முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி-பாம்புகள் ஆமைகள் வெளியேறல்

முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி-பாம்புகள் ஆமைகள் வெளியேறல்-

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் வெள்ளம் தேங்கி வருவதுடன் ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளன.

இதனால் தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தின் சிறிய முகத்துவாரங்களும் அண்மையில் வெட்டப்பட்டன.

இதனால் கடலை நோக்கி  பெருக்கெடுத்து ஓடும் ஆறு கடலுடன்  கலக்கும் போது  ஆற்று நீருடன் ஆற்றல் வளரும் சல்லுத்தாவரங்களும் ஆற்றில் கலக்கிறது.

இத் தாவரங்களுடன் பாம்பு,ஆமை போன்ற ஊர்வனவும்  கடலில் இருந்து உயிருடன் கரைகளில் ஒதுங்கி நடமாடுவதுடன் கடற் கரையோரங்களில் காணப்படும் படகு தோணி  கற்கள் மற்றும் நீர் வடிந்தோடும் துவாரங்களுக்குள்ளும்  பதுங்கி இருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர் .இதனால் மருதமுனை பெரியநீலாவணை காரைதீவு கல்முனை நிந்தவூர்  கடற்கரைக்கு செல்பவர்கள் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.