தளபதியின் 'ரஞ்சிதமே' பாடலுக்கு எதிர்ப்பு

ஆசிரியர் - Editor II
தளபதியின் 'ரஞ்சிதமே' பாடலுக்கு எதிர்ப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தளபதி விஜய் நடித்து விரைவில் வெளியாக உள்ள, 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளுக்கு, பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் 'ரஞ்சிதமே' என்ற பாடலை அண்மையில் வெளியிட்டனர். இப்பாடலுக்கு, தமன் இசையமைக்க, தளபதி விஜய் உடன் மானசி இணைந்து பாடியுள்ளனர். விவேக், பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்த பாடல், ஏற்கனவே வெளியான சில பாடல்களின் கலவை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், பாடலில் இடம் பெற்ற, 'உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே' என வரிகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு