பெண்களிடையே அதிகரிக்கும் மது அருந்தும் பழக்கம்!! -புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்-
இந்தியாவில் பெருநகரங்களில் வசித்துவரும் பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தொண்டு நிறுவனம் இது தொடர்பான ஆய்வை 5 ஆயிரம் பெண்களிடம் நடத்தியது. இதில் கொரோனாவுக்கு பின் பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் தங்களை குடிகாரிகளாக மாற்றிவிட்டதாக பல பெண்கள் கூறியுள்ளனர். மேலும், டெல்லியில் மதுபானத்துக்கு வழங்கப்பட்ட 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', சிறப்பு தள்ளுபடி விற்பனை, டோர் டெலிவரி போன்ற சலுகைகளும் மது வாங்க தங்களை தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
மது அருந்தும் பெண்களில் 38 சதவீதம் பேர் வாரத்துக்கு இருமுறையும், 19 சதவீதம் பேர் வாரத்துக்கு 4 முறையும் மது அருந்துவதாக கூறியுள்ளனர்.