சொகுசு ஜீப் இறக்குமதி செய்வதாக கூறி 80 லட்சம் மோசடி! கைது செய்யப்பட்ட அருட்தந்தை விளக்கமறியலில்..

ஆசிரியர் - Editor I
சொகுசு ஜீப் இறக்குமதி செய்வதாக கூறி 80 லட்சம் மோசடி! கைது செய்யப்பட்ட அருட்தந்தை விளக்கமறியலில்..

ஜப்பானில் இருந்து சொகுசு ஜீப் வண்டி ஒன்றை இறக்குமதி செய்து தருவதாக கூறி சுமார் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த அருட்தந்தை ஒருவர் மோசடி விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஐஸ் போதை பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, 

தனது சேவை பெறுநர் வேறொருவருக்கு இந்தப் பணத்தை வழங்கியதாகவும், அவர் பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றங்களுக்காக கைதாகி பிணையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபருக்கு பணம் வழங்கியதற்கான ஆவணத்தை முன்வைக்க முடியுமா என சந்தேகநபரிடம் நீதிவான் வினவியதோடு, சந்தேகநபர் அதனை முன்வைக்க தவறியதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு