விக்ரமுக்கு கோல்டன் விசா

ஆசிரியர் - Editor II
விக்ரமுக்கு கோல்டன் விசா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் நோக்கில் 'கோல்டன் விசா' என்ற சிறப்பு விசாவை அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் பல்வேறு திரைப்பிரபலங்களுக்கும் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரான விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

முன்னதாக கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு