SuperTopAds

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் "பிணக்குதற்பெட்டி" (Dispute Box) வழங்கிவைப்பு

ஆசிரியர் - Editor III
மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால்

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் "பிணக்குதற்பெட்டி" (Dispute Box) வழங்கிவைப்பு.

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் பொதுமக்களால் தனிப்பட்ட ரீதியில்  மத்தியஸ்த சபைக்கான பிணக்குகளை ஆற்றுப்படுத்துவதை மிகவும் முறையாகவும், துரிதமாகவும் மேற்கொள்வதற்கும் மத்தியஸ்த  செயற்பாடுகளை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதற்குமான "பிணக்குதற்பெட்டி" (Dispute Box)    பிரதேச செயலகத்திற்கு   வழங்கி வைக்கப்பட்டன.

இதன் மூலம் பொதுமக்களின் பிணக்குகளை நேரடியாக சமர்ப்பிப்பதற்கான  ஒழுங்குகள் 'சமர்ப்பித்தல் பெட்டி' ஊடாக இலகுபடுத்த  செய்யப்பட்டுள்ளன.பிரதேச செயலகங்களில்  பொதுமக்களின் பிணக்குகளை மத்தியஸ்த சபைகளுக்கு சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றான 'சமர்ப்பித்தல் பெட்டி' ஒழுங்குகளை நீதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு செய்துள்ளது .

குறித்த பிணக்குதற்பெட்டிகள் கடந்த சில தினங்களாக  பிரதேச செயலாளர்களின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்  பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்  நீதியை அணுகுவதற்கான சந்தர்ப்பத்தை அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல் என்ற மகுடத்தின் கீழ்  மத்தியஸ்த சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய பிணக்குகளை எழுத்து மூலம் குறித்த பெட்டியில் இடுவதன் ஊடகவும் அல்லது மத்தியஸ்த சபைகளின் தவிசாளரிடம்   நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியும் என பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்பார்வை மற்றும் செயற்படுத்துவதற்காக திருகோணமலை  மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகத்திற்கு மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைப்பு செய்யப்பட்டுள்ளனர்.